​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் மக்களவை தேர்தல் -31 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு

Published : Jul 22, 2019 6:22 PM

வேலூர் மக்களவை தேர்தல் -31 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு

Jul 22, 2019 6:22 PM

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்  ஏசி சண்முகம், திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த் உட்பட  31 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் வேலூரில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு கடந்த ஜூலை 11 முதல் 18ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 19ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

வேட்புமனுக்களை திரும்ப பெற 22ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் யாரும் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெறவில்லை. தேர்தலில் போட்டியிட 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்  ஏசி சண்முகம், திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த் உட்பட 31 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

19 பேரின் வேட்புமனுக்களை பணம் செலுத்தாத காரணத்தினாலும் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினாலும் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.