​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் அம்ரித்ராஜை மணந்த அமெரிக்க வீராங்கனை

Published : Jul 22, 2019 5:09 PM

இந்திய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் அம்ரித்ராஜை மணந்த அமெரிக்க வீராங்கனை

Jul 22, 2019 5:09 PM

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை அலிசன் ரிஸ்க் தனது திருமண நிகழ்ச்சியில் இந்தி பாடலுக்கு நடனமாடினார்.

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் ஆனந்த் அம்ரித்ராஜின் மகனும்  டென்னிஸ் வீரருமான ஸ்டீபன் அம்ரித்ராஜ்  சமீபத்தில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான அலிசன் ரிஸ்க்கை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தனது திருமணத்தின் போது Baar Baar Dekho என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கு தனது தோழியுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை அலிசன் ரிஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அலிசன் சிறப்பாக நடனமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.