​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹாங்காங்கில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம்

Published : Jul 22, 2019 4:50 PM

ஹாங்காங்கில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம்

Jul 22, 2019 4:50 PM

ஹாங்காங்கில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

ஹாங்காங்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்திருத்ததை உடனடியாகக் கைவிட வலியுறுத்தி கடந்த 7 வாரங்களாக வார இறுதி நாட்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய பேரணியில் 4 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் எச்சரித்த வரம்பை மீறி முன்னேறிய சிலர் சீன அரசுக் கட்டிடங்களின் முன் இருந்த பலகைகளில் அதன் இலச்சினையை அழித்தனர். தொடர்ந்து முன்னேற முயன்றதால் போலீசார் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி விரட்டினர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்த நிலையில், வெள்ளை நிற டி சர்ட், முகமூடி அணிந்து வந்த கும்பல் ரயில் நிலையம் உள்பட சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல்களில் 45 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போராட்டத்துக்குள் கலவரத்தை ஹாங்காங் அரசே தூண்டிவிடுவதாக போராட்டாக்காரர்கள் சிலர் குற்றம்சாட்டிய நிலையில், அரசு அதை மறுத்துள்ளது