​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் தொகுதியில் 26ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்

Published : Jul 22, 2019 4:49 PM



வேலூர் தொகுதியில் 26ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்

Jul 22, 2019 4:49 PM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 26ஆம் தேதி, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது- இதில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.

கதிர் ஆனந்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 26ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக மாநில இளைஞரணிச் செயலாளராக அண்மையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் வருகிற 29 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.