​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
20 நிமிடத்திற்கு முன்னதாகவே வந்த அரசு பேருந்தால் மெமொ... ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்

Published : Jul 22, 2019 4:36 PM

20 நிமிடத்திற்கு முன்னதாகவே வந்த அரசு பேருந்தால் மெமொ... ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்

Jul 22, 2019 4:36 PM

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

துவரங்குறிச்சியிலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து, நத்தம் பேருந்து நிலையத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பணிமனை மேளாலர் மதன் கார்த்திக் என்பவர் மெமோ வழங்கியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூடுதல் பணிசுமை வழங்குவதாகவும் கூறி, மற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மெமோ திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.