​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சறுக்கி விழுந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குநர் பலி

Published : Jul 22, 2019 4:01 PM



சறுக்கி விழுந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குநர் பலி

Jul 22, 2019 4:01 PM

சென்னை திருவல்லிக்கேணியில் முன்னால் சென்ற ஆட்டோவை இருச்சக்கர வாகனத்தில் முந்திச் சென்ற போது சறுக்கி விழுந்து, எதிரே வந்த லாரி மீது மோதி சின்னத்திரை உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிஸ்வரன். இவரது நண்பர் பெருமாள். இவர்கள் இருவரும் தொலைக் காட்சி தொடரில் உதவி இயக்குனர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் வானம் கொட்டட்டும் படத்தில் உதவி கலை இயக்குனர்களாகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். மழை பெய்த சாலையில் வேகமாக சென்றால் ஏற்படும் விபரீதத்தை உணராமல், முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதில் வாகனத்துடன் இருவரும் சறுக்கி விழுந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த பெருமாள் கீழே விழுந்த போது எதிரே வந்த லாரியின் பக்கவாட்டு பகுதியின் மீது அவரது தலை மோதி, சம்பவ இடத்திலேயே அவர் பலியாகி விட, மாரிஸ்வரன் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து வாகனத்தை ஓட்டிச்சென்ற மாரிஸ்வரன் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.