​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1,65,000 பேர் சேர்க்கை

Published : Jul 22, 2019 3:59 PM



இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1,65,000 பேர் சேர்க்கை

Jul 22, 2019 3:59 PM

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் பரவின. இதற்கு பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பதாகவும், இதற்கான பட்டியல் அரசிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சென்னை ராயபுரம் மற்றும் போரூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப் பள்ளியில் படித்த இரு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக கூறினார்.