​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள நகை வியாபாரியிடம் ரூ. 13 லட்சத்தை பறித்துச் சென்ற கும்பல்

Published : Jul 22, 2019 2:34 PM



கேரள நகை வியாபாரியிடம் ரூ. 13 லட்சத்தை பறித்துச் சென்ற கும்பல்

Jul 22, 2019 2:34 PM

கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எனக்கூறி, கேரள தங்க வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற கும்பலில் 6 பேர் கைதாகியுள்ள நிலையில், கொள்ளை கும்பல் வியாபாரியை காரில் ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 17ஆம் தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற தங்க வியாபாரியை குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி அவரது நண்பரான அபினேஷை கோவை அழைத்து வந்துள்ளார். கோவை வந்த இருவரையும் சிவா, அரவிந்த் ஆகிய இருவர் சேர்ந்து ஸ்விஃப்ட் காரில் சிவானந்தா காலணி அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு செல்லும் வழியில் இவர்களது காரை மடக்கிய இன்னோவா காரிலிருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், தங்களை லஞ்ச ஒழிப்புத்துறை என அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களது காரில் நவ்ஷாத்தை ஏற்றியுள்ளனர். கண்ணப்ப நகர் அருகே வந்ததும் நவ்ஷாத் கையிலிருந்த 13 லட்ச ரூபாயை பறித்துக்கொண்டு அவரை இறக்கிவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரித்த போலீசார், 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்ததோடு, 2 கார்களையும் எட்டரை லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே கொள்ளை கும்பல் வியாபாரியை காரில் ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.