​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலத்தடி நீர் செறிவூட்டல் பணியை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்

Published : Jul 22, 2019 2:23 PM

நிலத்தடி நீர் செறிவூட்டல் பணியை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்

Jul 22, 2019 2:23 PM

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தெப்பக்குளத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்.

நிலத்தடி நீரை அதிகரிக்கவும், மழை நீரை சேகரிக்கவும், பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாக்கவும் மத்திய அரசு நாடு முழுவதும் ஜல் சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளில் தண்ணீரை சேமிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

முதற்கட்டமாக வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 குளங்களில் ரூபாய் 12 லட்சம் மதிப்பில் நிலத்தடி நீர் செறிவூட்டும் குழாய்களை அமைக்கும் பணி துவங்கியது.