​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் அதிர்ச்சியளிக்கும் வீடியோ

Published : Jul 22, 2019 2:14 PM



உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் அதிர்ச்சியளிக்கும் வீடியோ

Jul 22, 2019 2:14 PM

உத்தரபிரதேச மாநிலத்தில் நிலத்தகராறால் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத்தகராறில் கடந்த 17ஆம் தேதி கிராம தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததோடு, 28 பேர் படுகாயம் அடைந்து வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 30 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.