​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு

Published : Jul 22, 2019 1:53 PM



சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு

Jul 22, 2019 1:53 PM

புதுச்சேரியில் கூடிய சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை இல்லை எனக்கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் நாராயணசாமி பேச எழுந்தபோது குறுக்கிட்ட அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், புதுச்சேரியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் சிறப்பு சட்டமன்றத்தை தற்போது கூட்டுவதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து அவையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் பாஜக என ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.