​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்போம் என்று உறுதி மொழி எடுக்கவேண்டும் - எஸ்.பி.வேலுமணி

Published : Jul 22, 2019 12:08 PM



இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்போம் என்று உறுதி மொழி எடுக்கவேண்டும் - எஸ்.பி.வேலுமணி

Jul 22, 2019 12:08 PM

மழைநீரை சேமிக்கும் பணியில் மக்கள் ஈடுபடுமாறு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் பெய்த மழையில், எவ்வளவு விழுக்காடு நீரை சேமித்துள்ளோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மழைநீர் சேகரிப்பை பொருத்தவரையில், அரசு தொடர்ந்து தனது கடமையை செய்து கொண்டிருப்பதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ஆனால், இதை ஒரு குழுவோ, அமைப்போ அல்லது அரசோ மட்டும் செய்து முடிப்பது எளிதான காரியம் அல்ல என்று கூறியுள்ளார்.

மழைநீர் சேமிப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன், மழைநீர் சேமிப்புத் திட்டங்களில் மக்கள் அனைவரும் ஈடுபடுமாறு எஸ்.பி.வேலுமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்போம் என்று உறுதி ஏற்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளதுடன், மழைநீர் சேமிப்பு.. நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக என்றும் குறிப்பிட்டுள்ளார்