​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை - கர்நாடக சபாநாயகர்

Published : Jul 22, 2019 11:46 AM



நம்பிக்கை வாக்கெடுப்பை மேலும் தாமதிக்க வாய்ப்பே இல்லை - கர்நாடக சபாநாயகர்

Jul 22, 2019 11:46 AM

ம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த, முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சபாநாயகரிடம் மேலும் 2 நாட்கள் அவகாசம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இன்றைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. காங்கிரசை சேர்ந்த 12 எம்எல்ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ்பெற்றுவிட்டனர். இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆனால், 15 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படாத நிலையில் குழப்பம் உருவானதால், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.

முதலமைச்சர் குமாரசாமி பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தபோதிலும் வியாழன், வெள்ளி இரு நாட்களிலும் விவாதம் மட்டுமே நடைபெற்றது. ஆளுநர் இருமுறை கெடு அளித்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று, சுயேச்சை எம்எல்ஏக்களான சங்கர் (R Shankar) மற்றும் நாகேஷ் (H Nagesh) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மேலும் 2 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று, சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமாரை சந்தித்து முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இதை மேலும் தாமதிக்க முடியாது என சபாநாயகர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, கர்நாடக ஆளுங் கூட்டணியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஏன் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்க ஆஜராகுமாறு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசில் உத்தரவிடப்பட்டுள்ளது.