​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அவசர சிகிச்சைக்காக 5 கிலோ மீட்டருக்கு மேல் டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்

Published : Jul 22, 2019 10:47 AM

அவசர சிகிச்சைக்காக 5 கிலோ மீட்டருக்கு மேல் டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்

Jul 22, 2019 10:47 AM

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மலைகிராமங்களில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்களை பிரசவத்திற்காக பல கிலோமீட்டர் தூரம் வரை டோலி கட்டித் தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது.

பாடேறு வனப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லை.

இதனால் அவசர மருத்துவ சிகிச்சைத் தேவைகளான பிரசவ வலி, விஷக் கடி உள்ளிட்டவற்றுக்குக் கூட 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் டோலி கட்டித் தூக்கிக் கொண்டு காடு, மலை, குளம், குட்டைகளைக் கடந்து சென்று, பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது.

இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளதால் அரசு சாலை வசதி ஏற்படுத்தித் தருவதோடு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல வகை செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.