​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊழல்வாதிகளைக் கொலை செய்யுங்கள் எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்

Published : Jul 22, 2019 10:06 AM

ஊழல்வாதிகளைக் கொலை செய்யுங்கள் எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்

Jul 22, 2019 10:06 AM

ஊழல்வாதிகளைக் கொலை செய்யுமாறு தீவிரவாதிகளுக்கு ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் யோசனை கூறி இருப்பது சர்ச்சையாகியுள்ளது.

கார்கிலில் சுற்றுலாவை மேம்படுத்தும் நிகழ்ச்சியில் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், யாராக இருந்தாலும், துப்பாக்கியின் முன் அரசை தலை வணங்கச் செய்து விடமுடியாது என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களைக் கையில் எடுக்கும் இளைஞர்கள், அப்பாவி மக்களையும், காவல்துறையினரையும் கொலை செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நாட்டையும், ஜம்மு காஷ்மீரையும் கொள்ளையடித்தவர்களைத் தானே கொலை செய்ய வேண்டும் என்று கூறிய சத்யபால் மாலிக், அப்படி யாரையாவது கொலை செய்துள்ளீர்களா? என்றும் கேட்டுள்ளார்.

இவரது பேச்சு சர்ச்சையாகி உள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ இனி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால், ஆளுநரின் உத்தரவைக் கேட்டே அவர்கள் அவ்வாறு செய்ததாகக் கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.