​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவுக்கான புதிய சீன தூதர் டெல்லி வந்தடைந்தார்

Published : Jul 22, 2019 8:04 AM



இந்தியாவுக்கான புதிய சீன தூதர் டெல்லி வந்தடைந்தார்

Jul 22, 2019 8:04 AM

இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சன் வெய் டாங் பொறுப்பை ஏற்றுக் கொள்ள டெல்லி வந்துள்ளார்.

முன்னதாக பெய்ஜிங்கில் இந்திய செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீன தூதர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேம்பட தாம் பாடுபட உள்ளதாக உறுதியளித்தார். ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவிலும் சீனாவிலும் ஆட்சிப்பொறுப்பில் வலிமையான தலைவர்கள் இருப்பதால் இருநாட்டு உறவுகளும் புதிய உச்சத்தை அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனாவின் முன்னாள் தூதர் லூ ஜாவோ ஹூய் சீன வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து தமது தூதரக பதவியை ராஜினாமா செய்து அவர் சீனா சென்று விட்டார். இதனையடுத்து தெற்காசியா குறித்த விரிவான அனுபவமும் அறிவும் மிக்கவரான 53 வயதான சன் வெய் டாங் புதிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்டில் சீனப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அக்டோபர் மாதத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்க உள்ள நிலையில் இருநாட்டு உறவுகளையும் இணக்கமாக வைத்திருக்க இருநாட்டு அதிகாரிகளும் அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.