​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை...

Published : Jul 22, 2019 7:37 AM



சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை...

Jul 22, 2019 7:37 AM

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. ராயப்பேட்டை, மெரினா, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது. தாம்பரம், கீழ்க்கட்டளை, சேலையூர் ஆகிய இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாகவும் பலத்த மழை பெய்தது.

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில், மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதால் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.