ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக்கில் நடந்த படகு போட்டியில், பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
‘ஹேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ முயற்சியின் ஒரு பகுதியாக, மலையோர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விளையாட்டு துறையில் உற்சாகப்படுத்தும் விதமாக ‘லடாக் ஒலிம்பிக்’ போட்டி நடத்தப்படுகிறது.
அந்தவகையில் இந்தாண்டு சான்ஸ்கர் (Zanskar) ஆற்றில் நடந்த ‘படகு போட்டியில்’ பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அச்சம் துளியும் இன்றி மாணவர்கள் படகை ஓட்டி செல்வதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.