​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசை எதிர்க்க வேண்டிய இடத்தில் ஜெயலலிதா எதிர்ப்பார்

Published : Jul 21, 2019 6:41 PM



மத்திய அரசை எதிர்க்க வேண்டிய இடத்தில் ஜெயலலிதா எதிர்ப்பார்

Jul 21, 2019 6:41 PM

ஜெயலலிதாவோ, கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமுமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தங்கத் தமிழ் செல்வனை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஏற்கனவே பலமுறை முயற்சி செய்த நிலையில், தற்போது அவரே வந்து விட்டதாக குறிப்பிட்டார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைத்தால் இழுபறியான ஆட்சியே அமையும் என்பதால் தேர்தலை சந்தித்து திமுக ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.