​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட விபத்து காப்பீடு திட்டம்..!

Published : Jul 21, 2019 6:21 PM



ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட விபத்து காப்பீடு திட்டம்..!

Jul 21, 2019 6:21 PM

ரயில் பயணிகளுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்துக்காக தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு ரயில்வே நிர்வாகம் 46 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.ஆர்.டி.சி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விபத்து காப்பீடு திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கொண்டுவந்தது. இதன்படி, ரயில் பயணி விபத்தில் உயிரிழந்தால் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயும், நிரந்தர ஊனம் அடைந்தால் 7 லட்சத்து 50 ஆயிரமும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவருக்கு 2 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கான கட்டணமாக பயணியிடம் 49 பைசா பிடித்தம் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு ஸ்ரீராம் ஜெனரல், ராயல் சுந்தரம், ஐசிஐசிஐ லோம்பர்டு ஆகிய 3 தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில், கடந்த 2 ஆண்டுகளில் 46 கோடி ரூபாய் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 7 கோடி ரூபாய் அளவிற்கே பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கு விபத்து காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.