​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜப்பான் வீராங்கனையிடம் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

Published : Jul 21, 2019 5:57 PM

ஜப்பான் வீராங்கனையிடம் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

Jul 21, 2019 5:57 PM

இந்தோனேசியா ஒபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

இந்தோனினேசியா தலைநகர் ஜகர்தாவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகனே யமகுசியுடன் மோதினார்.

51 நிமிடங்களுக்கு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். இதன் மூலம் ஜப்பானின் அகனே யமகுசி தங்கப்பதக்கம் வென்ற நிலையில், பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.