​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு தீரும் நிலையில் உள்ளதாக தகவல்

Published : Jul 21, 2019 5:47 PM



கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு தீரும் நிலையில் உள்ளதாக தகவல்

Jul 21, 2019 5:47 PM

கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் உள்ள முக்கிய கிணறுகளில், இயற்கை எரிவாயு தீரும் நிலையில் உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஆந்திராவில் 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 19 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் உள்ளன.

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கிடைக்கும் இந்தப் பகுதியானது சுருக்கமாக கே.ஜி. டி6 (KG D6) என்று அழைக்கப்படுகிறது. இதில் டி 1 மற்றும் டி 3 என்ற கிணறுகளில் தான் நாட்டிலேயே அதிக அளவு எரிவாயு கிடைத்து வந்தது. இந்த இரு எரிவாயு கிணறுகளில் இருந்து ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் நாளொன்றுக்கு 17 லட்சத்து 60 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு எரிவாயு எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த இரு எரிவாயுக் கிணறுகளும் தற்போது முடிவை நெருங்கி விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்து எரிவாயு எடுக்கப்படும் நிலையில் நீர் உட்புகுதல் மற்றும் குறை அழுத்தம் தொடர்பான சவால்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குறிப்பிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு மத்தியில் புதிதாக 6 கிணறுகள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.