​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாழுங் கிணற்றில் விழுந்த 3வயது சிறுவன்..

Published : Jul 21, 2019 4:34 PM



பாழுங் கிணற்றில் விழுந்த 3வயது சிறுவன்..

Jul 21, 2019 4:34 PM

சீனாவில் பாழுங் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை நீண்ட போராட்டத்துக்கு பின் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹேஸ் (Heze) நகரில், நேற்றிரவு 3 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள பாழுங்கிணற்றில் விழுந்துள்ளான். இதனை உடனடியாக பார்த்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சிறுவன் விழுந்த கிணறு 4 மீட்டர் ஆழத்துடன், குறுகலாக கட்டப்பட்டிருந்ததால், அக்கம்பக்கத்தினரால் மீட்க முடியாமல் போனது. அதனை தொடர்ந்து வந்த தீயணைப்பு துறையினர், அரை மயக்கத்துடன் இருந்த சிறுவனுக்கு உடனடியாக ஆக்சிஜன் சப்ளை செய்து, சிறுவனின் கையை கட்டி வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் கிணற்றின் உள்பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால் சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து சிறுவன் விழுந்த கிணற்றுக்கு அருகே, தீயணைப்பு துறையினர் புதிதாக குழி தோண்டி அங்கிருந்து சுரங்கப்பாதை அமைத்து சிறுவனை மீட்டனர்.