​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாற்றுதிறனாளிகள்

Published : Jul 21, 2019 4:32 PM



சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாற்றுதிறனாளிகள்

Jul 21, 2019 4:32 PM

கோவையில் நடைபெற்ற, சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

கோவையில், சிற்றுளி தொண்டு அமைப்பு மற்றும் கங்கா மருத்துவமனை சார்பில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகு தண்டுவட முறிவு மறுவாழ்வு மையத்தில் ‘ரன் பார் வீல்ஸ் மாரத்தான்’ போட்டி நடைபெற்றது. சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சிக்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சிறுவர், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடம் பிடித்த போட்டியாளர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

மாரத்தான் போட்டியை தொடர்ந்து அதே, இடத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதனை கண்டு ரசித்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான சக்கர நாற்காலி போட்டியில் 2ம் இடம்பெற்ற தமிழக பெண்கள் அணி மற்றும் 3ம் இடம்பிடித்த ஆண்கள் அணிக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.