​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு....

Published : Jul 21, 2019 4:21 PM



மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு....

Jul 21, 2019 4:21 PM

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாட இருக்கும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கான வீரர்களை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னரே தெரிவிக்கப்பட்டது போல தோனியின் பெயர் அணியில் இடம் பெறவில்லை. இதனால் இத்தொடரில் இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய ஷிக்கர் தவான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் டி20 அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் டெஸ்ட் அணியில் மற்றொரு தமிழக வீரரான ரவிசந்திரன் அஸ்வினின் பெயர் இடம்பெற்றுள்ளது.