​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருத்து சுதந்திரம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Jul 21, 2019 3:45 PM



கருத்து சுதந்திரம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

Jul 21, 2019 3:45 PM

காஞ்சிபுரம், அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமர் கூறினார். சென்னை, ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோ மீது தான் அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்பி சீட் கொடுக்கப்பட்டதால் அவர் ஜால்ரா அடிப்பதாகவும் கூறினார்.

கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளதாக தெரிவித்த அவர், முந்தைய திமுக ஆட்சியில் மேடை பேச்சுக்காக நடிகர் அஜித்குமார் விமர்சனத்துக்கு உள்ளானார் எனவும் தெரிவித்தார்.