​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு உதவிகள் வழங்கப்படும் - யோகி ஆதித்யநாத்

Published : Jul 21, 2019 3:18 PM



துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு உதவிகள் வழங்கப்படும் - யோகி ஆதித்யநாத்

Jul 21, 2019 3:18 PM

உத்தரபிரதேசத்தில், நிலப்பிரச்சினை தொடர்பாக நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் உள்ள விவசாய நிலத்தை அங்குள்ள பழங்குயிடின மக்கள் தர மறுத்ததால், ஊர் தலைவர் யக்யா தத் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த புதன் கிழமையன்று துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆளும் பாஜக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய யோகி ஆதித்யநாத் நிலத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அனைத்துவித உதவிகளை செய்யும் எனவும், சம்பவம் நடந்த பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.