​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் எம்.எல்.ஏ அழகர் ராஜாவை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்..!

Published : Jul 21, 2019 2:54 PM

முன்னாள் எம்.எல்.ஏ அழகர் ராஜாவை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்..!

Jul 21, 2019 2:54 PM

தேனி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகர் ராஜவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தேனி அருகே வீரபாண்டியில் நடைபெறவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களும், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்களும் திமுகவில் இணைய உள்ளனர்.

இதில் பங்கேற்பதற்காக தேனி சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் எம்.எல்.ஏ அழகர் ராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். மேலும் வயது மூப்பால் உடல்நலம் குன்றியுள்ள அழகர் ராஜாவின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

அப்போது சட்டப்பேரவையில் தான் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த புத்தகத்தை அழகர் ராஜா ஸ்டாலினுக்கு வழங்கினார். 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அழகர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.