​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் பயணிகளிடம் செல்போன் திருடிய நபர்

Published : Jul 21, 2019 2:51 PM



ரயில் பயணிகளிடம் செல்போன் திருடிய நபர்

Jul 21, 2019 2:51 PM

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய நபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் திருட்டு போவதாக வந்த புகாரின்பேரில் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த பெரியமேடு பகுதியை சேர்ந்த சான் பாஷன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

பயணிகளிடம் செல்போன் திருட வந்ததாகவும், ஏற்கனவே திருடிய செல்போன்களை மூர்மார்க்கெட்டில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்கும் புளியந்தோப்பை சேர்ந்த ஹரிசுதன் என்பவரிடம் விற்றதாகவும் சான் பாஷன் தெரிவித்தார். இதையடுத்து, ஹரிசுதனிடம் இருந்து 54 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.