​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி

Published : Jul 21, 2019 1:59 PM

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி

Jul 21, 2019 1:59 PM

நெல்லையில் தனியார் பள்ளி மாணவர்கள் மழைத்துளி வடிவில் அமர்ந்து ஓவியம் வரைந்து மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெல்லை, சங்கரன்கோவிலில் தனியார் மேல்நிலைப்பள்ளியில், "மழைநீரை சேகரிப்போம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் மழைத்துளி வடிவில் அமர்ந்து மாணவர்கள் ஓவியம் வரைந்த காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.

இதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.