​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1.68 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

Published : Jul 21, 2019 1:52 PM



அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1.68 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

Jul 21, 2019 1:52 PM

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அரசுப் பள்ளிகளை அனைவரும் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அவற்றை மேம்படுத்தமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தேர்வெழுதி 82 ஆயிரம் பேர் பணி வாய்ப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவித்த செங்கோட்டையன், கலந்தாய்வு மூலம் பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார். வரும் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலணிகளுக்குப் பதில் ஷூ சாக்ஸ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.