​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Published : Jul 21, 2019 12:52 PM



புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Jul 21, 2019 12:52 PM

புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டம் சரிவதை தடுப்பது மற்றும் மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிதி திரட்டும் வகையிலும் கடற்கரை சாலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு தனித்தனி பிரிவுகளாக காந்தி திடலில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகளான நேரு வீதி, காந்தி வீதி, புஸ்சி ((bussy)) வீதி வழியாக மீண்டும் கடற்கரை சாலைக்கு வந்தடைந்தது.