​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலைகளில் சுற்றித்திரிந்த மனநிலை பாதித்த பெண் மீட்பு

Published : Jul 21, 2019 10:45 AM



சாலைகளில் சுற்றித்திரிந்த மனநிலை பாதித்த பெண் மீட்பு

Jul 21, 2019 10:45 AM

திருச்சி ஸ்ரீரங்கத்தில், மனநிலை பாதிக்கப்பட்டு, சாலைகளில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்ட போலீசார், கணவரை தேடிப்பிடித்து வரவழைத்து ஒப்படைத்தனர்.

ஸ்ரீரங்கம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், சுற்றித்திரிவதாக வந்த தகவலையடுத்து, மகளிர் காவல் ஆய்வாளர் சித்ரா சென்று மீட்டு, அன்பாலயம் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தார்.

அவரது பெயர் அபிநயா என்றும், சிவகங்கையைச் சேர்ந்த ராமநாதன் என்பவரின் மனைவி எனவும் தெரியவந்ததையடுத்து கணவரை, ஸ்ரீரங்கம் வரவழைத்து, ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, உள்ளிட்ட ஆதாரங்களை சரிபார்த்து, அபிநயாவை ஒப்படைத்தனர்.

3 குழந்தைகள் உள்ள நிலையில், அபிநயா மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், திடீர் என்று காணாமல் போனதால், பல்வேறு இடங்களில் தேடியதாக கூறிய ராமநாதன், ஸ்ரீரங்கம் போலீசார் மீட்டு ஒப்படைத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

மனைவியை அன்பாக வைத்துக்கொள்ளுமாறும், உரிய மருத்துவ சிகிச்சையுடன், யோகா உள்ளிட்டவை கற்று ஆரோக்கியமாக வாழுமாறும், டிஎஸ்பி ராமச்சந்திரன் அறிவுரை கூறி, சொந்தஊருக்கு அனுப்பி வைத்தார்.