​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பால் விற்பனை நிலையத்தில் 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்

Published : Jul 21, 2019 9:59 AM



பால் விற்பனை நிலையத்தில் 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்

Jul 21, 2019 9:59 AM

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தனியார் பால் விற்பனை நிலையத்தில் புகுந்த நபர்கள், அங்கிருந்தவர்களை அரிவாளால் வெட்டி பணம், செல்போன்களை பறித்து சென்றனர்.

கும்பகொட்டாய் பகுதியில் செயல்படும் பால் விற்பனை நிறுவனத்தில் இரவு நேரத்தில் 4 நபர்கள் புகுந்துள்ளனர். அங்கிருந்த ஊழியர் சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கணேசன், மணிகண்டன் ஆகியோரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த பணம், செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பினர்.

வெட்டுக்காயமடைந்த சக்கரவர்த்தி, கணேசன், மணிகண்டன் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டும்போது, எதிர்பாராத விதமாக மர்ம நபர் ஒருவருக்கும் வெட்டு விழுந்து, அவரும் ராசிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெட்டுப்பட்ட மர்ம நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நாமகிரிபேட்டை போலீசார், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.