​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - மம்தா பானர்ஜி கண்டனம்

Published : Jul 21, 2019 6:17 AM



உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - மம்தா பானர்ஜி கண்டனம்

Jul 21, 2019 6:17 AM

உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சாடியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை வன்முறை மற்றும் கும்பலாக தாக்கிய சம்பவங்களில் 1,100 பேர் உயிரிழந்துவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்கத்தில் கலவரம் வெடித்தால் பாஜகவினர் உண்மை அறியும் குழுவை அனுப்பி வைப்பதாக குற்றம் சாட்டிய அவர், உத்தரப்பிரதேசத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் ஒரு குழுவை அனுப்பினால் அக்குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர் என்று குறிப்பிட்டார்.

பிரியங்கா தர்ணா போராட்டம் நடத்தியதில் தவறு இல்லை என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்தார்.