​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தக்காளி விலை தலைநகரில் கிலோ 80 ரூபாயாக அதிகரிப்பு

Published : Jul 21, 2019 6:05 AM



தக்காளி விலை தலைநகரில் கிலோ 80 ரூபாயாக அதிகரிப்பு

Jul 21, 2019 6:05 AM

டெல்லியில் கிலோ தக்காளி விலை 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து வரும் தக்காளி டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் கொண்டுவரப்படுகின்றன.

வழக்கமாக 20 முதல்25 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி நேற்று டெல்லியில் உள்ள காய்கறி கடைகளில் குறைந்தபட்ச விலையாக 80 ரூபாய்க்குதான் கிடைத்தது. மொத்த கொள்முதல் மண்டிகளில் விலை அதிகரித்துள்ளதே காரணம் என்று சில்லரை வியாபாரிகள் கூறுகின்றனர்.

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று விசாரித்தால் மழை தவறியதால் குறைந்த விளைச்சல், மோசமான வானிலையால் நாசமான பயிர்கள், போக்குவரத்து கட்டணம் உயர்வு, சாலைகள் பராமரிப்பின்மை, பதனிடும் கிடங்குகள் இல்லாத நிலை போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.