​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அத்திவரதரை தரிசிக்க போதுமான வசதிகள் செய்யப்படவில்லை- பொன்.ராதா குற்றம்சாட்டு

Published : Jul 20, 2019 7:18 PM

அத்திவரதரை தரிசிக்க போதுமான வசதிகள் செய்யப்படவில்லை- பொன்.ராதா குற்றம்சாட்டு

Jul 20, 2019 7:18 PM

அத்திவரதரை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் போதுமான வசதிகளை செய்யவில்லை என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் காஞ்சிபுரத்துக்கு அமைச்சர்களை அனுப்பி, பொது மக்கள் சிரமமின்றி தரிசிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சாதாரண தேர் திருவிழாவில் உள்ள ஏற்பாடுகள் கூட அத்திவரதர் கோவிலில் செய்யவில்லை என்ற அவர். கூட்ட நெரிசல் காரணமாக கோவிலுக்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வர வேண்டாம் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் விளம்பரம் கொடுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார்.

உடனடியாக பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுமென்றால் திருப்பதி நிர்வாகிகளை அழைத்து வந்துகூட ஏற்பாடுகள் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.