​​ பூஷண் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் டாடா ஸ்டீல் நிறுவனம் முன்னணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூஷண் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் டாடா ஸ்டீல் நிறுவனம் முன்னணி

Published : Feb 18, 2018 12:30 AM

பூஷண் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் டாடா ஸ்டீல் நிறுவனம் முன்னணி

Feb 18, 2018 12:30 AM

பூஷண் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் டாட்டா நிறுவனம் முன்னணியில் உள்ளது.

வாகன வகை இரும்பு உற்பத்தி நிறுவனமான பூஷண் ஸ்டீல் நிறுவவனம் பல்வேறு வங்கிகளிடம் 50 ஆயிரம் கோடி ருபாய்க்கு மேல் கடன் பெற்றுத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் தொடர்புடைய வங்கிகள் அந்த நிறுவனத்தை ஏலத்துக்கு கொண்டு வந்துள்ளன. இதற்கான ஏலம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஏலத்தில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனமும் JSW என்ற ஸ்டீல் நிறுவனமும் முன்னணியில் உள்ளன.

ஏலத்தின் போது JSW நிறுவவனம் 28 ஆயிரம் கோடி ரூபாயை ஏலத் தொகையாகக் குறிப்பிட்ட நிலையில் டாட்டா ஸ்டீல் நிறுவனம் 35 ஆயிரத்து 200 கோடி ரூபாய் குறிப்பிட்டுள்ளது.

பூஷண் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவது, வணிக மேம்பாட்டுக்கு ஏதுவாக இருக்கும் என்று டாடா நிறுவனம் கருதுவதாகக் கூறப்படுகிறது.