​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம்

Published : Jul 20, 2019 7:00 PM



மத்திய அரசின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம்

Jul 20, 2019 7:00 PM

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் அனுப்பிய உத்தரவுகளுக்கு டிக்டாக் செயலி நிர்வாகம் உடனடி பதில் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் மிகவேகமாக பிரபலமான செயலிகளில் ஒன்றாக டிக்டாக் இருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டு, பின் கடும் நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டது.

இதன்பின் டிக்டாக் பயனாளர் எண்ணிக்கை மேலும் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் டிக்டாக் செயலி குறித்து வந்த புகார்களை அடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சைபர் சட்டம் மற்றும் இ-பாதுகாப்பு துறை டிக்டாக் மற்றும் ஹலோ பைட்டேன்ஸ் நிறுவனங்கள் பதில் அளிக்கக் கோரி 24 கேள்விகள் அடங்கிய அறிக்கையை அனுப்பியது.

இந்நிலையில், இந்திய அரசு சட்டத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக டிக்டாக் செயலி நிர்வாகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது. அரசு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவோம் என டிக்டாக் தெரிவித்துள்ளது.

ஜூலை 22 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நிலையில் டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்கள் உடனடியாக பதில் அளித்துள்ளது.