​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உ.பி யில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் நிதி உதவி

Published : Jul 20, 2019 6:33 PM



உ.பி யில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் நிதி உதவி

Jul 20, 2019 6:33 PM

உத்தரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 10 பேரில் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அந்த மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சோன்பத்ரா அருகே உள்ள விருந்தினர் விடுதியில் தங்கினார்.

இதற்கிடையே, கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிலரது உறவினர்கள் பிரியங்கா காந்தியை சந்திக்க விருந்தினர் விடுதிக்கு வந்தனர். அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.