​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை

Published : Jul 20, 2019 5:53 PM

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை

Jul 20, 2019 5:53 PM

நீட் தேர்வு அறிமுகமான பிறகு அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளை அளிக்கும் வகையில் அனைவரும் மத்திய அரசின் இணையத்தில் பதிவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வு அறிமுகம் ஆவதற்கு முன்னர் தனது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர உதவியதாகவும், நீட் தேர்வு வந்த பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் ஒருவரை கூட சேர்க்க முடியவில்லை என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.