​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம்

Published : Jul 20, 2019 4:11 PM

மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம்

Jul 20, 2019 4:11 PM

கேரளாவில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான குமரி மீனவர்கள் 3 பேரை கண்டுபிடிக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நீரோடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஸ்டான்லி, நிக்கோலஸ், சகாயம், ஜான்போஸ்கோ, ராஜு ஆகிய 5 பேர் கேரள கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றதாகவும், புயல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியானதால், ஆழ்கடலில் இருந்து நேற்று கேரளாவின் நீண்டகரை மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பி வந்தாகவும், கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தாகவும் கூறப்படுகிறது.

இதில், 3 மீனவர்களை அலை அடித்து சென்றதாகவும், மீனவர்கள் ஸ்டாலின், நிக்கோலஸ் ஆகியோர் நீந்தி கொல்லம் கடற்கரைப் பகுதிக்கு பத்திரமாக வந்து சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தப்பிவந்த மீனவர்கள் தெரிவித்தனர்.