​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தலில் திமுக வெற்றி

Published : Jul 20, 2019 3:41 PM

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தலில் திமுக வெற்றி

Jul 20, 2019 3:41 PM

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கும்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் பொதுத்துறை, வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகளில் மக்கள் திமுகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளதாகவும், ஆனால் மிட்டாய் காண்பித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டார்கள் என கூறி வாக்களித்த மக்களை முதலமைச்சர் சொச்சைப்படுத்தி விட்டார் என்றார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், வாக்குறுதி என்ற மிட்டாயை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று தான் சொன்னதாக விளக்கம் அளித்தார்.

திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற முடியாதவை என்றும், ஆனால் அதிமுக எதை செய்ய முடியுமோ அதை வாக்குறுதிகளாக கொடுத்து வாக்கு சேகரித்ததாகவும் கூறினார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என கருதி தான் வாக்குறுதிகள் அளித்ததாக தெரிவித்தார்.

விரைவில் மாற்றம் வரும், அவ்வாறு வரும்பட்சத்தில் அனைத்து வாக்குறுதிகளையும் திமுக நிச்சயம் நிறைவேற்றும் என கூறினார். பின்னர் பேசிய முதலமைச்சர், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து நீங்கள் வெற்றி பெற்றது தான் உண்மை என கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.