​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
24 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரியங்கா காந்தி

Published : Jul 20, 2019 2:50 PM

24 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரியங்கா காந்தி

Jul 20, 2019 2:50 PM

உத்தரப்பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினரை 24 மணி நேர போராட்டத்துக்குப் பின் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

சோன்பத்ராவில் நிலத்தகராறில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களை நேற்று பிரியங்கா காந்தி சந்தித்தார். பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு சென்ற அவரை 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.

இதனால் பிரியங்கா காந்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 24 மணி நேரமாகியும் தன்னை அனுமதிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசாமல் தான் திரும்பப் போவதில்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

இதையடுத்து 10 பேரின் குடும்பத்தையும் சந்தித்த பிரியங்கா காந்தி அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசி, அரவணைத்து ஆறுதல் கூறினார்.