​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்..!

Published : Jul 20, 2019 1:38 PM



தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்..!

Jul 20, 2019 1:38 PM

தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் விவரங்களை ஒப்படைக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழை ஒரு மொழிப்பாடமாக பயிலாமல் பிற மொழிகளில் பயின்று பட்டம் பெற்று, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி. ஆல் நடத்தப்படும் தமிழ்மொழி 2ம் நிலை தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயமாகும். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

இந்நிலையில் தமிழ்மொழி 2ம் நிலை தேர்வை எழுதி தேர்ச்சி பெறாமல், தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.