​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை

Published : Jul 20, 2019 12:57 PM



3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை

Jul 20, 2019 12:57 PM

உத்தரப்பிரதேசத்தில் 3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

எட்டாவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3 தலைகளுடன் இருப்பது கண்டு மருத்துவர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரதான தலைப் பகுதியை ஒட்டி 2 தலைகள் இருப்பது போன்று பிறந்தாலும், அவற்றில் கண்கள், மூக்கு போன்ற உறுப்புக்கள் இல்லை.

குழந்தை உயிர்பிழைக்க 55 சதவீத வாய்ப்பே இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்பும் அதன் மூளை வளர்ச்சி சீராக இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.