​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையோரம் இருந்த விவசாய கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து - 5 மருத்துவர்கள் உயிர்தப்பினர்

Published : Jul 20, 2019 12:28 PM



சாலையோரம் இருந்த விவசாய கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து - 5 மருத்துவர்கள் உயிர்தப்பினர்

Jul 20, 2019 12:28 PM

தெலங்கானாவில், இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரை பக்கவாட்டில் திருப்பியதில், நிலைத்தடுமாறிய கார் சாலையோரம் இருந்த விவசாய கிணற்றில் விழுந்து கவிழ்ந்தது.

ஐதராபாத்திலிருந்து ஜெகத்யாலாவிற்கு செல்ல மருத்துவர்கள் 5 பேர் காரில் இன்று அதிகாலை பயணித்துள்ளனர். அவர்களது கார், சாரங்கப்பூர் பகுதி அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடந்துள்ளது.

இதனை பார்த்த மருத்துவர்கள் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பக்கவாட்டில் காரை திருப்பியுள்ளனர். இதில் நிலைத்தடுமாறியாக கார் வேகமாக சென்று சாலையோரம் இருந்த விவசாய கிணற்றில் விழுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 5 பேரையும் அப்பகுதி மக்கள் லேசான காயங்களுடன் மீட்டனர். மேலும் தகவல் அறிந்து வந்த சாரங்கப்பூர் போலீசார், காரை கிணற்றிலிருந்து மீட்டு, சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.