​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பார் ஊழியர் ஓட ஓட விரட்டிக் கொலை

Published : Jul 20, 2019 11:54 AM

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பார் ஊழியர் ஓட ஓட விரட்டிக் கொலை

Jul 20, 2019 11:54 AM

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பார் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது.

முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த குட்டி என்கிற நரசிம்மன், தூத்துக்குடி செல்வநாயகபுரத்திலுள்ள மதுக்கடை பாரில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவர் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அவரிடம் மட்டக்கடை பகுதியை சேர்ந்த மதன் உள்ளிட்ட 4 பேர், மது வாங்கியுள்ளனர். அப்போது அதிக விலைக்கு மதுவிற்பனை செய்வதாகக் கூறி நரசிம்மனுடன், அந்த கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது.

தகராறு முற்றியதில், மதன் உள்ளிட்ட 4 பேரும், நரசிம்மனை ஓட ஓட விரட்டிச் சென்று கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் உயிரிழந்தவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.