​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கை : 2 வது நாளாக கடையடைப்பு

Published : Jul 20, 2019 11:30 AM



மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கை : 2 வது நாளாக கடையடைப்பு

Jul 20, 2019 11:30 AM

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி இரண்டாவது நாளாக, கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று நாள் கடையடைப்பு நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளான இன்று குத்தாலம், செம்பனார் கோயில், தரங்கம்பாடி, பொறையார், திருக்கடையூர், சுற்றுவட்டாரப்பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் சுற்றுவட்டார பகுதியிலும் பத்தாயிரம் கடைகள் என மயிலாடுதுறை சுற்றுவட்டாரங்களில் சுமார் 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.