​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் தொழிற்கூடம் சென்னையில் தொடக்கம்

Published : Jul 20, 2019 11:02 AM



குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் தொழிற்கூடம் சென்னையில் தொடக்கம்

Jul 20, 2019 11:02 AM

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்கும் வகையில், சென்னையில் குறைந்த விலையில் நாப்கின்கள் தயாரிக்கும் தொழிற்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், இந்த திட்டத்தை மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் தொடங்கி வைத்தார். சுமார் 800 சதுரடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ள இத்தொழில்கூடத்தின் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் சனிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படும் எனவும், அவற்றை இக்கல்லூரியில் முன்னர் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தயாரிக்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், இங்கு மாதம் தோறும் தயாரிக்கப்படும் 40 ஆயிரம் நாப்கின்களில் 8 ஆயிரம் நாப்கின்கள் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் எனவும், மீதமுள்ளவை மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.